Skip to main content

Diwali Festival


தீபாவளி

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசைமுன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும்சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.


பெயர்க் காரணம்
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

இந்துக்களின் தீபாவளி

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
  • இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
  • புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.
  • கிருஷ்ணர்நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி

மகாவீரர் நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம்மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள்வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையானநாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்குங்குமத்தில் கௌரியும்சந்தனத்தில்பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள்ஏரிகள்குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

மேற்குநாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது
தீபாவளியன்று வழக்கமாக ஏற்றப்படும்விளக்குகள்
மாற்றுப் பெயர்தீபத் திருநாள் / தீப ஒளித்திருநாள்
அனுசரிப்பவர்கள்இந்துக்கள்,சீக்கியர்கள்,சமணர்கள் சமய ரீதியாகவும் ஏனைய இந்தியர்கள் காலாச்சார ரீதியாகவும் கொண்டாடுகின்றனர்.
வகைசமய, இந்திய
முக்கியத்துவம்Celebrate life and strengthen relationships
நாள்ஐப்பசி அமாவாசை
கொண்டாட்டங்கள்வீடுகளை விளக்குகளால் அழங்கரித்தல், வெடி வெடித்தல், பரிசு பரிமாரல்
அனுசரிப்புகள்பூஜைகள்




Renganathapuram Village People Diwali celebration:

Enjoy the festival on Diwali 




       The Village people is very enjoy this festival with new dress and sweets and fire works.



update:14th November 2012

Comments

Popular posts from this blog

Thuraiyur Important Phone Numbers

Thuraiyur Important Phone Numbers Police Station:  04327-222330,222100 Fire Station: 04327-101 Taluka Office:  04327-222393 Register Office: 04327-245539 Panchayath Office: 04327-256366 Government Hospital :04327-222308 Post Office:04327-222790,222791 Sub Post Office:04327-244777 Forest Office:04327-222706 Travelers Ban gala: 04327-243980 Telephone Office:04327-243786 Telephone Customer Care:04327-245300 Electricity Board :04327-256365 Highway Department:04327-222730 Union Office:04327-222347       

Village Map

Airport

Trichirapalli Airport History           This airport was built by the  British  during  World War II  and primarily used by the  British Airforce  during the world wars. Damaged aircraft which landed in the airport were taken to a workshop in Ponmalai, at a distance of 2 km, repaired and brought back into service. The airport was given permission for civilian operations after the war. Actual passenger traffic started only in the early '80s.  Air Lanka  started its operations in 1981 with a weekly flight to  Colombo  and subsequently increased its operations to 14 flights a week currently.  Indian Airlines  started its operations to  Chennai  and mid-east countries in mid '80s.          Air Ceylon (Srilankan Airlines) began operations in the late '40s while  Indian  started services before 1980.Both airlines operated flights from Trichy...